Thursday, January 13, 2011

குழந்தை,
தன் அப்பாவின்
முகத்தில் அடித்துக்கொண்டு
விளையாடுகிறது.

Sunday, January 9, 2011

கண்ணீர் வரும் அளவு சிரித்துவிட்டு
நன்பன் சொன்னான்,
ரொம்ப சிரிக்கிறேன் பயமா இருக்கு...

அண்ணே, இட்லி எவளோ?
ஒன்னாரபா
...
வக்கிட்டா?
இல்ல, போதும்.

Saturday, January 1, 2011

பக்கத்து வீட்டுக்காரர்கள் என் பைக்கில்
துணி காயப்போடுகிறார்கள்,
சீக்கிரம்
வேலைக்கு போகவேண்டும்.

பழைய சாமான் தள்ளுவண்டியில்
உடைந்த பொம்மை,
எங்கோ குழந்தை வளருகிறது.