Wednesday, January 15, 2014

சிக்னலில் பிச்சைக்காரி 
கார் கண்ணாடியை தட்டி பிச்சைக்கேட்க 
உள்ளிருந்து குழந்தை 
அவளை பார்த்து ஆசையாய் சிரிக்க 
பதிலுக்கு இவளும் சிரித்துவிட்டு செல்கிறாள்.
கேட்டின் மீது ஏறி 
ரோட்டில் செல்வோர்களை பார்த்து 
சந்தோஷமாக டாட்டா காண்பித்துக்கொண்டிருக்கிறான்
ஒன்றரை வயது சிறுவன். 
அவன் சிரித்து கொண்டிருக்கையிலேயே 
ஒரு வாய் ஊட்டிவிடுகிறாள் 
அவன் அம்மா.
மழையே,
அப்படியே
மனிதர் மனங்களையும் கழுவி
மறுநாள் விடியல் போல்
செய்திடு.
நல்ல இசை முடிகையில்,
நம்மை விட்டு ஏதோ
பிரிந்து போவது போலுள்ளது.
கனவு.

திகட்ட திகட்ட சந்தோஷம்.
போதும் போதுமென வேண்டுகிறேன்
கடவுளிடம்.
பரபரப்பான சாலையில்,
மனதை அமைதிப்படுத்துகிறது,
சாலையோர சருகுகள்.
எவரும் கவனிப்பாரின்றி
தபாலுக்காக காத்திருக்கிறது,
தபால் பெட்டி...
(பள்ளி காலத்தில் எழுதிய சில கவிதைகள்)

பெண்னே நீ என்ன அலைபாயும் கடலா?

உன் அடுத்த அலைக்கு என் மனம் ஏங்குகிறது.

பூக்கடைக்கும் மீன்கூடைக்கும்

விளம்பரம் தேவையா?
பெண்ணே உன் வருகையை அறிய
வருகை பதிவேடு தேவையா?